About us:

மன்னை ஸ்ரீ மதி V. அகிலாண்டேஸ்வரி அவர்கள் பி.லிட்., தமிழ்ப் புலவர் பட்டமும், தமிழ் இலக்கியத்தில் முதுகலைப்பட்டமும். புலிப்பாணி-300 என்ற தலைப்பில் ஜோதிடவியல் ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் பட்டமும்(M.phil / M.K.U ) பெற்றவர். இவர் ஜோதிடவியலில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் டி. ஐ. ஏ பட்டயமும் பெற்றவர்.

பல ஜோதிட பட்டிமன்றங்களிலும், கருத்தரங்கங்களிலும் , வழக்காடு மன்றங்களிலும்,  திறம்படப்பேசிவரும் சிறந்த பேச்சாளர் ஆவார் மற்றும், ராஜ் டி.வி. நீயா? நானா?, சன்  டி.வி. அரட்டை அரங்கம், ஜெயா டி.வி. என் செல்லம் போன்ற பல சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்ற பேச்சாளர் ஆவார். திரு. முருகு இராஜேந்திரன் அவர்களின் ஜோதிட ஆய்வு மையத்தின் சார்பில் ஜோதிட ரத்னா என்ற பட்டமும் பெற்றவர்.

இவர் ஸ்ரீதேவி ராஜ ராஜேஸ்வரி அம்பாளின் உபாசகர். இவர் தினகரன், தினமலர், ஹிந்து, ஞானஆலயம், கோகுலம்கதிர், பாபாஜி சித்தர் ஆன்மீகம், ஆருடம், தாம்ப்ராஸ் போன்ற தினசரி மற்றும் ஜோதிட ரீதியான கேள்வி பதில்களையும் எழுதியவர். தாம்ப்ராஸ்(தமிழ்நாடு பிராமணர் சங்கம்) பத்திரிக்கையில் ராசி பலன்களை மாதம்தோறும் எழுதி வருகிறார். சிறந்த நாவலாசிரியராகவும் விளங்குகிறார்.

விஸ்வ ஹிந்து பரீக்ஷத் மற்றும் இதயம் பேசுகிறது இணைந்து நடத்திய பள்ளி ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான இந்து மதம் மற்றும் ஆன்மீக நலக் கட்டுரைகள் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றவர். வளசை டைம்ஸ் போன்ற பத்திரிகையில்  வருட பலன்கள் எழுதியவர். இலக்கிய, ஆன்மிக,ஜோதிடத்துறை சம்பந்தமான எழுத்தாளர், தமிழ் இலக்கியம், மற்றும் ஜோதிடம் சம்பந்தமாக பல மேடைகளில் பேசி வரும் சிறந்த பேச்சாளர்.

கவிதைகள், கதைகள், கட்டுரைகள், கேள்வி-பதில்கள், ஜோதிட கருத்துக்கள் போன்ற இதழியல் சம்பந்தப்பட்ட அனைத்து வகையிலும் எழுத்தாற்றல் பெற்ற சிறந்த எழுத்தாளர்.

வள்ளி கல்யாணம், ருக்மிணி கல்யாணம் போன்ற ஹரி கதைகள், கதா காலட்சேபம் செய்யும் சங்கீத உபந்யாசகர். ஜாதகம், கைரேகை, வாஸ்து, எண்கணிதம், திருமணப் பொருத்தம், பெயரியல், சர்வமுகூர்த்த நிர்ணயம் போன்ற ஜோதிட சம்பந்தமான விஷயங்களை திறம்பட ஆய்வுசெய்து சிறந்த ஜோதிடராகவும் விளங்குகிறார்.